top of page
Thirumangalyam

திருமணத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கும் போது மாங்கல்ய தந்துனானேன என்று மந்திரம் சொல்லுவார்கள். தந்து என்றால் கயிறு. மஞ்சள் கயிறு தான் தந்து என குறிப்பிடப்படுகிறது. மஞ்சள் சரடில் தாலி இருந்தால் தான் மங்களம். 

1.

"மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவன ஹேதுநா, கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவச ரதசதம்". அதாவது, 'பாக்கியவதியே, நான் சிரஞ்சீவியாக இருப்பதற்குக் காரணமாக மாங்கல்யத்தை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீயும் நூற்றாண்டு வாழ்வாயாக' என்று அர்த்தம்.

2.

தாலி என்பது திருமணத்தினபோது மணமகன், மணமகளை தன் உரிமை மனைவியாக அடையாளப் படுத்த அணிகின்ற ஒரு ஆபரணமே "மாங்கல்யம்" எனும் தாலியாகும். தாலி அணிந்த பெண்ணானவள் விவாகமாகியவள் என்பதையும், கணவன் உயிருடன் இருப்பதையும் உறுதி செய்வதோடு, அவள் ஒரு "சுமங்கலி" என்பதையும் காட்டி நிற்கின்றது. 

3.

திருமாங்கல்யச் சரடு, ஒன்பது இழைகள் கொண்டது. தெய்வீக குணம், தூய்மை குணம், மேன்மை, ஆற்றல், விவேகம், தொண்டு, தன்னடக்கம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல் ஆகியவைதான் அந்த ஒன்பது இழைகள். மாங்கல்ய சூத்ரம் எனப்படும் தாலிக் கயிறுக்கு ரகசிய ஆபரணம் என்றும் பெயருண்டு. மணமானவள் என்று அனைவருக்கும் தெரிய வேண்டியது மாங்கல்யச் சரடு மட்டுமே. கணவனுக்கு மட்டுமே தெரிய வேண்டியது திருமாங்கல்யம்.

4.

bottom of page