top of page

Know The Facts

கேசத்தின் ஒவ்வொரு இழையையும் அப்படியே விரித்து விட்டு விட்டால் துஷ்ட சக்திகளைப் பிடித்து இழுத்து வருகிற ஒவ்வொரு"" ஏரியல்'" மாதிரி. அதனால் தான் அதை அப்படி விடாமலே முடிவது ; அல்லது பின்னுவது. அடியிலிருந்து நுனி வரை பின்னி நுனியில் கூட ஒரு பிச்சாளமும் வெளியே பார்க்க இல்லாமல் நாரோ, குஞ்ஜலமோ வைத்துத் தற்காப்புப் பண்ணுவார்கள். பின்னலையே கொண்டையாகப் பிச்சோடா என்றும் முடிந்து போட்டுக் கொள்வார்கள்.

பின்னலின் மகத்துவம் :

 

பின்னல் என்பது உறவைக் குறிக்கிறது. முடியை விரித்து விடுவது அமங்கலமானது. அதாவது முடி என்பது அழகான கூந்தல். அந்த கூந்தலை பின்னி பூ 5வத்து பார்ப்பதன் அழகே தனி. ஆனால் இன்றைய சூழல் அப்படியா?

 

தலைமுடியின் நுனி வழியாக ஆத்மசக்தி வெளியேறுகிறது. நல்ல, தீய உணர்வுகள் அல்லது அதிர்வுகள் வந்து செல்வதற்கான ஊடகம் போன்றது முடியின் நுனி. அப்படியானால் மொட்டை அடித்துக் கொள்கிறார்களே அவர்களை என்ன சொல்வது என்ற கேள்வி எழும் உங்களுக்குள். வெளியிலிருந்து பெறுவதற்கும் ஒன்றுமில்லை. நம்மிடமிருந்து போவதற்கும் ஒன்றுமில்லை என்பதை உணர்த்துவற்காக.

 

தலைவிரி கோலத்தை தவிர்ப்போம். இது உறவின் மீதான பிடிப்பை அறுக்கக்கூடியது. பின்னல் இதன் அமைப்பு திரிவேணி சங்கமத்தை ஒத்தது. 3 நதிகள் சேரும் போது இரண்டு நதிகள் கண்களுக்கு புலப்படும். (கங்கை, யமுனை) ஒரு நதி கண்களுக்கு புலப்படுவதில்லை (சரஸ்வதி). இதுபோலவே பின்னலின் 3 பகுதிகளில் இரண்டு பகுதிகளே புலப்படுகின்றன.

 

பின்னலின்

 

வலது - பிறந்த வீடு, இடது - புகுந்த வீடு, நடுப்பகுதி - பெண்.

 

தன்னை மறைத்து இரு வீட்டாரையும் இணைத்து அழகுற தோற்றமளிக்கச் செய்வதே இதன் பொருளாகும். தன்னை முன்னிறுத்தும் பெண்ணை காட்டிலும் தன் குலத்தை முன்னிறுத்துபவவே உயர்ந்தவள் ஆவாள். ஆகையினால் பின்னல் வெறும் அலங்காரம் அல்ல. வாழ்வின் தத்துவம்.

bottom of page